திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2016 (17:44 IST)

மல்யுத்த வீராங்கனையை அசால்ட்டாக வீழ்த்திய இந்திய பெண் போலீஸ் அதிகாரி : வீடியோ

இந்தியாவின் முதல் தொழில் முறை பெண் மல்யுத்த வீரர் பிபி புல்புல்லை ஹரியானாவைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி நிமிட நேரத்தில் வீழ்த்தி பார்வையார்களை பரவசப்படுத்தினார்.


 

 
ஜலந்தரில் உள்ள காண்டினெண்டல் மல்யுத்த பொழுதுபோக்கு மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இந்திய பெண் மல்யுத்த வீரர் பிபி புல்புல், கூடியிருந்த கூட்டத்தை பார்த்து யாரவது சண்டைக்கு வாருங்கள் என்று சவால் விட்டார். 
 
இதனையடுது, கலப்பு தற்காப்பு கலை சாம்பியனும், ஹரியானா பெண் போலீஸ் அதிகாரியுமான கவிதா களத்தில் இறங்கி, நிமிட நேரத்தில் பேபி புல் புல்லை இரண்டு முறை வீழ்த்தி பார்வையளர்களை பரவசப்படுத்தினார். 
 
பார்ப்பதற்கு ஒரு சினிமாவில் இடம்பெறும் காட்சியை போல் இருக்கும் அந்த சண்டையை நீங்களும் பாருங்கள்...