புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (15:07 IST)

ஹரியாணா புதிய முதல்வர் யார்? இன்று மாலை பதவியேற்பு..!

ஹரியானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி முறிந்ததை அடுத்து முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் இன்று மாலை புதிய முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
ஹரியானா மாநிலத்தில் பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் திடீரென முதல்வர் மனோகர் லால் கட்டர் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஹரியானாவில் 46 எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் தற்போது பாஜகவிடம் 41 எம்எல்ஏக்கள் உள்ளனர் 
 
மேலும் ஏழு சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு பெற பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஹரியானா மாநில புதிய முதல்வராக நயாப் சிங் சைனி என்பவர் பதவியேற்க இருப்பதாகவும், அவர் கவனரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில்  ராஜினாமா செய்த ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva