1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (18:38 IST)

முதல்வரின் காரை முற்றுகையிட்ட விவசாயிகள்: பெரும் பரபரப்பு!

முதல்வரின் காரை முற்றுகையிட்ட விவசாயிகள்: பெரும் பரபரப்பு!
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஆயிரக்கணக்கில் கூடி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் மசோதாவை ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் ஹரியானா மாநிலம் சண்டிகரில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்களின் வாகனத்தை திடீரென விவசாயிகள் முற்றுகை இட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருப்புக் கொடியுடன் அங்கு வந்த விவசாயிகள் திடீரென முதல்வரையும் காரையும் முற்றுகையிட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும் காரை ஒரு இன்ச் கூட நகர விடாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது