யார் தடுத்தாலும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வேன்: ஆம் ஆத்மி எம்பி ஹர்பஜன்சிங் பேட்டி..!
ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூறிய நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங் யார் தடுத்தாலும் நான் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு யார் செல்ல வேண்டும், யார் செல்லக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யார் தடுத்தாலும் நான் நிச்சயமாக ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வேன்.
கடவுள் வழிபாடு என்பது தனிமனித விருப்பம். நான் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வதில் யாருக்காவது பிரச்சனை என்றால், அவர்களை என்னை என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொள்ளட்டும்.
இந்த நேரத்தில் கோவில் கட்டப்படுவது நமது அதிர்ஷ்டம், எனவே நாம் எல்லோரும் ராமரிடம் சென்று ஆசீர்வாதம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran