ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (12:52 IST)

பாஜக பேரணியில் குண்டு வெடிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வெற்றி பேரணியில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றுளது. இதே பாஜக 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பாஜக மேற்கு வங்கத்தில் வளர்ந்து வருவதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இடைதேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மயுரேஸ்வர் என்ற இடத்தில் பாஜகவினர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.