காங்கிரஸ் கண்டமானதற்கு பப்புதான் காரணம்! – குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு ராகுல்காந்திதான் காரணம் என கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத் இன்று முதல் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ராகுல்காந்தியின் முடிவுகளால் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். இந்நிலையில் தனது கட்சி விலகல் குறித்து சோனியா காந்திக்கு ஆசாத் கட்சி விலகல் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் “துரதிர்ஷ்டவசமாக திரு. ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகும், குறிப்பாக ஜனவரி 2013க்குப் பிறகு அவர் உங்களால் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதும், முன்பு இருந்த முழு ஆலோசனை அமைப்பும் அவரால் தகர்க்கப்பட்டது.
இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், UPA அரசாங்கத்தின் நிறுவன ஒருமைப்பாட்டைத் தகர்த்த 'ரிமோட் கண்ட்ரோல் மாடல்' இப்போது காங்கிரஸ்க்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ராகுல் காந்தியால் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் அல்லது அவரது பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர்களால் எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளையும் நீங்கள் ஒரு பெயரளவிலான நபராக பார்த்துக் கொண்டிருந்தீர்கள்” என தெரிவித்துள்ளார்.
குலாம் நபி அசாத்தின் இந்த கட்சி விலகலை தொடர்ந்து காங்கிரசில் மேலும் பல மூத்த தலைவர்கள் பதவி விலகக்கூடும் என பேசிக்கொள்ளப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.