திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 டிசம்பர் 2017 (15:40 IST)

குஜராத் தேர்தல் ; மதியம் 2 மணி வரை 35.52 சதவீத வாக்குப்பதிவு

இன்று முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தல் முடிவுகள் டிச.18ம் தேதி வெளியாகிறது. 

 
இந்த தேர்தலில் 57 பெண்கள் உட்பட 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 24,689 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மட்டும் 2.12 கோடி பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்,
 
இந்நிலையில் இன்று மாலை 2 மணி வரை மொத்தம் 35.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.