மணமேடையில் பப்ஜி விளையாடிய மணமகன்: உறவினர்கள் அதிர்ச்சி
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இளைஞர்கள் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். தொடர்ச்சியாக பலமணி நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிய ஒருசிலர் உயிரையும் விட்டுள்ளனர். எனவே பப்ஜி விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மணமேடையில் மணமகளுக்கு தாலி கட்டிய அடுத்த நிமிடம் மொபைல் போனை எடுத்து பப்ஜி விளையாடிய மணமகன் குறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உறவினர்கள் பரிசளிக்க வந்தபோது கூட பரிசை கவனத்துடன் வாங்காமல் மணமகன் பப்ஜி விளையாட்டில் மூழ்கியிருந்தது உறவினர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது
இதுகுறித்த வீடியோ ஒன்று டிக்டாக் செயலியில் வைரலாகி வருவதால் டிக்டாக் வீடியோவிற்காக வேண்டுமென்றே இந்த வீடியோ எடுக்கப்பட்டதா? அல்லது உண்மையிலேயே மணமேடையில் மணமகன் பப்ஜி விளையாடினாரா? என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை