வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 25 டிசம்பர் 2024 (07:25 IST)

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

Murmu President
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா உள்பட ஐந்து மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த உத்தரவை ஜனாதிபதி திரௌபதி முர்மு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன

கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் பொறுப்பேற்கின்றனர். இதன் அடிப்படையில், ஒடிசா ஆளுநராக இருந்த ரகுபர் தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். மேலும், மிசோரம் ஆளுநராக இருந்த ஹரிபாபு, ஒடிசாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி விகே. சிங் மிசோரம் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவின் தற்போதைய ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளையில், பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், கேரளாவின் புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

மணிப்பூருக்கு, முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புகள் குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.


Edited by Siva