1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:49 IST)

தேநீர் விருந்தை புறக்கணித்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய கிரண்பேடி

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுவை கவர்னர் கிரண்பேடி அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் 3 நாட்களுக்குள் விளக்க அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
சுதந்திர விழாவை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் ஆண்டுதோறும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படும். நடந்து முடிந்த சுதந்திர தினம் மாலை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
புதுவை கவர்னர் கிரண்பேடியுடனான கருத்து வேறுபடு காரணமாக சில அரசியல் கட்சி தலைவர்கள் விருந்தில் கலந்துக்கொள்ளவில்லை. இதனால் கிரண்பேடி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தனது செயலர் தேவாநீதிதாசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
 
அதாவது, விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கான காரணம் குறித்து 3 நாட்களுக்குள் உரிய விளக்க வேண்டும். கிரண்பேடியின் இந்த அதிரடி உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.