மக்கள் வெள்ளத்தில் தவித்த நிலையில் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற கேரள அமைச்சர்
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல் முகாம்களில் அகதிபோல் தங்கியுள்ளனர். கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.
இந்த நிலையில் கேரளாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வெள்ளத்தில் தவித்து கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில வனத்துறை அமைச்சர், ராஜு, ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இது கட்சிக்குள் சலசலப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ராஜூவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளில் இருந்து மட்டுமின்றி ஆளுங்கட்சி பிரமுகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தன்மீதான அதிருப்தி அதிகரித்ததை கேள்விப்பட்ட அமைச்சர் ராஜு, உடனே தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு கேரளாவுக்கு திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் அவர் கேரளா திரும்பியதும் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.