செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (08:22 IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூபாய் 25 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமையல் எரிவாயு சிலிண்டர்களை இதுவரை ரூ.825.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூபாய் 25 உயர்த்தப்பட்டு ரூ.850.50ஆக என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் வணிகரீதியிலான எரிவாயு சிலிண்டர் விலையும் ரூபாய் 84.50 உயர்த்தப்பட்டுள்ளது என்ப்தும், இதனால் வணிக ரீதியான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.1,687.5 0 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விலையேற்றம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு பலமுறை சிலிண்டர் எரிவாயு விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது