கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரம் திடீர் நிறுத்தம்: நெட்டிசன்கள் கிண்டல் எதிரொலியா?
கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரம் திடீர் நிறுத்தம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியானதை பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த கட்ட சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் கங்குலியின் சகோதரர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இந்த நிலையில் சவுரவ் கங்குலி எண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்து வந்தார் என்பதும் அந்த விளம்பரத்தில் அவர் குறிப்பிட்ட நிறுவனத்தின் எண்ணெயை பயன்படுத்தினால் இதய நோய் வராது என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கங்குலி அந்த குறிப்ப்பிட்ட எண்ணெயை பயன்படுத்தியதால் அவருக்கு இதய சம்பந்தமான நோய் வந்திருக்கிறது என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்ய ஆரம்பித்தனர். இதனை அடுத்து அந்நிறுவனம் அந்த விளம்பரத்தை நிறுத்தியதாக தெரிகிறது
இதயத்திற்கு நல்லது என விளம்பரம் செய்தவரே இதய நோயால் பாதிப்பு அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்ததால் அனைத்து ஊடகங்களிலும் சம்பந்தப்பட்ட எண்ணெய் விளம்பரம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த தகவல் தற்போது பரபரப்பாக வைரலாகி வருகிறது