செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

நீட் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! மத்திய அரசு அறிவிப்பு

நீட் தேர்வு எழுத இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என நேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த தேர்வின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கையை 155ல் இருந்து 296 உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கடந்த ஆண்டு 3182 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
தமிழகத்திலும் இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் இருக்கும் என்றும் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் இந்த ஆண்டு வெளி மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதும் நிலை இருக்காது என்றும் தேசிய தேர்வு கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது