ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (21:55 IST)

முன்னாள் குத்துசண்டை வீரர் புற்றுநோயால் உயிரிழந்தார்!! ரசிகர்கள் சோகம்

முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் என்பவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது
 
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் மணிப்பூரை சேர்ந்த பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் 
 
இவர் கடந்த சில நாட்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவரது உடல்நிலையை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் வட்டாரம் கூறின
 
இந்த நிலையில் சற்று முன்னர் டிங்கோ சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குத்துச்சண்டை ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்