கட்டாய ஓய்வளித்து அரசு பணியாளர்களை மூட்டை கட்டும் மத்திய அரசு!!
இந்திய ஐடி நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்வது போல, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வை அளித்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களைத் திறன் ஆய்வு செய்து அரசுக்குத் தேவையில்லை என கருதப்படும் பணியாளர்களுக்கு கட்டாய ஓய்வை அளித்துள்ளது.
இதன் படி குரூப் ஏ பிரிவில் 30 பேரையும், குரூப் பி பிரிவில் 99 பேர் என மொத்தம் 129 மத்திய அரசு ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு என்ற பெயரில் பணியை விட்டு நீக்கியுள்ளது மத்திய அரசு.