வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜூன் 2023 (11:35 IST)

20 நிமிடத்தில் பெங்களூர் -ஹவுரா ரயிலுக்கு தகவல் கொடுக்க முடியவில்லையா? ஊழியர்கள் அஜாக்கிரதையா..!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிய 20 நிமிடம் கழித்தே பெங்களூர் - ஹவுரா ரயில் மோதிய நிலையில் 20 நிமிடத்தில் பெங்களூர் ரயிலுக்கு தகவல் கொடுத்து நிறுத்த முடியவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
நேற்று மதியம் 3:20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியுள்ளது. அந்த ரயில் விபத்து நடந்த பகுதிக்கு சுமார் ஆறு முப்பது மணிக்கு சென்ற நிலையில் 7 மணிக்கு சரக்கு ரயில் உடன் மோதி உள்ளது. 
 
ஆனால் 720 மணிக்கு தான் அதன் அருகில் உள்ள ரயில்வே ட்ராக்கில் பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. போலாசாரில் ஒரு மிகப்பெரிய ரயில் விபத்து நடந்த நிலையில் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் பக்கத்து ரயில்வே தண்டவாளத்தில் விழுந்திருந்த தகவல் தெரிந்தும், அந்த 20 நிமிடத்தில் பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தகவல் கொடுத்து அந்த ரயிலை நிறுத்த முடியவில்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 
டெக்னாலஜி, செல்போன் உள்ள இந்த காலத்தில் மூன்றாவது ரயில் மோதியதை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும் என்றும், இது முழுக்க முழுக்க ரயில்வே ஊழியர்களின் அஜாக்கிரதை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran