1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 27 டிசம்பர் 2014 (15:26 IST)

அமீர் கானின் பீகே திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அமீர் கான் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் பீகே திரைப்படத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.
 
அமீர் கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடிப்பில், ராஜ் குமார் ஹிராணி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியானது பீகே திரைப்படம். இந்தப் படம் பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 

 
இந்நிலையில், பெரும்பாண்மையினரின் மதத்தை கேலி செய்வதாகவும், அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இத்திரைப்படம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
 
பீகே திரைப்படத்தின் நடிகர் அமீர் கான் மற்றும் இயக்குநர் ராஜ் குமார் ஹிராணி ஆகியோடுக்கு எதிராக இந்து கடவுளையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தியதாக இரண்டு முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
இந்துமத சட்ட அமைப்பின் செயலாளர் பிரசாந்த் படேல், இருவருக்கும் எதிராக குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக ”பயமிருப்பவர்கள்தான் கோவிலுக்குச் செல்வார்கள்” என்ற வார்த்தையைத் தனியாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடுத்தப் பக்கம்...

இது குறித்து கூறியுள்ள பிரசாந்த் படேல், “டெல்லி காவல்துறையினர் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் இது குறித்து விசாரணை நடத்துவார்கள். முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்து சட்ட அமைப்பு மூலம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம்” என்றார்.
 

 
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பீகே திரைப்படத்திறகு தடை விதிக்க மறுத்து விட்டது. இது குறித்து தலைமை நீதிபதி லோதே கூறுகையில், “உங்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் பார்க்க வேண்டாம். மதங்களின் முகங்களை இங்கு கொண்டுவர வேண்டாம்” என்று தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறுகையில், “இவைகள் எல்லாம் பொழுதுபோக்கு விஷயங்கள், நீங்கள் இவற்றை தடை செய்தால், இது மற்றவர்களையும் பாதிக்கும். எல்லாம் இணையதளமாக மாறிவிட்டன. நீங்கள் என்ன மறைக்க முடியும்?” என்றும் கேள்வியெழுப்பி உள்ளார்.