புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 19 மார்ச் 2017 (10:36 IST)

ஆண் போல நடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்!!

இரண்டு ஆண்டுகளாக ஆண் போல நடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.


 
 
சினி சியாத் என்கிற சனிஷா எனும் பெண் ஹோம் மேட் செக்ஸ் பொம்மைகளை விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். இவர் சிறுமி ஒருவளுக்கு இரண்டு ஆண்டுகளாக ஆண் போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
பாதிக்கப்பட்ட சிறுமியின் புத்தகத்தில் சனிஷா எழுதிய கடிதம் ஒன்றை சிறுமியின் அக்காவிற்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் தவறான முறையில் எழுதப்பட்டிருந்ததால் சிறுமியின் அக்கா அதை தன் பெற்றோரிடம் கொடுத்துள்ளார். 
 
அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து சனிஷா கைது செய்யப்பட்டுள்ளார். சனிஷா பார்பதற்கு ஆண் மாதிரியான தோற்றத்தில் இருந்துள்ளார். எனவே, அவரை பாலின சோதனைக்காக அழைத்துச்சென்றனர். அதில் அவர் பெண் என்று நிரூபணம் ஆனது. 
 
பின்னர் சனிஷா மீது குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.