செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (15:56 IST)

சபரிமலை போராட்டம்: ஃபாத்திமா பின்னணியில் பெண் மாவோயிஸ்டுகள்; உளவுத்துறை எச்சரிக்கை

சபரிமலைக்கு செல்ல முயற்சித்த பாத்திமா பின்னணியில் பெண் மாவோயிஸ்டுகள் இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
 
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் நேற்று மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவிலுக்குள் செல்ல முயற்சித்த கவிதா என்ற பெண்ணும், பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்ற பெண்ணும் திரும்ப அனுப்பப்பட்டனர். 
 
இந்நிலையில் கோவிலுக்குள் சென்றே தீருவோம் என கூறிய பாத்திமா, கவிதா உள்ளிட்ட பெண்களின் பின்னணியில் பெண் மாவோயிஸ்டுகள் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆகவே போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய உளவுத்துறை மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.