வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய கட்டணம்: பட்ஜெட்டில் அறிவிப்பு என தகவல்!
வருமான வரி தாக்கல் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன
தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய கட்டணமாக ரூபாய் 1000 என்றும் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை வசூலிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது
இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 3,000 கோடி வருடத்திற்கு வருமானம் வரும் என்று கூறப்படுகிறது
தற்போது வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் இந்தியாவில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே வருமான வரி செலுத்துவதாகவும் மற்றவர்கள் எண்பத்தி ஏழு என்ற பிரிவின் அடிப்படையில் வருமான வரியிலிருந்து விலக்கு பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது
இதனை அடுத்து வருமான வரி தாக்கல் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது