1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2017 (11:42 IST)

குடிபோதையில் 5 வயது மகனை கத்தியால் குத்திய தந்தை!!

பட்டம் வாங்கி விளையாட தந்தையிடம் 2 ரூபாய் கேட்டதால் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்திய சம்பவம் வாரணாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியை சேர்ந்தவர் வினோத் ராஜ்பர். இவர் சுற்றுலா கைடாக பணியாற்றி வருகின்றார். இவர் மனைவி காயத்திரி, சத்யம் (10), சிவம் (5) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. 
 
இந்நிலையில், குடிபோதையில் இருந்த வினோத்திடம், சிவம் பட்டம் வாங்க 2 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் எரிச்சலடைந்த வினோத் அவனை அடித்ததாக தெரிகிறது. 
 
சிறிது நேரம் கழித்து காயத்திரியும், சத்யமும் வந்து பார்க்கும் போது, சிவமை வினோத் கத்தியால் சில இடங்களில் குத்தியிருந்தார். கதறி அழுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு போன் செய்தனர்.
 
குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். கத்தியால் குத்திய வினோத்தை போலீஸார் கைது செய்தனர்.