வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (11:02 IST)

ஆம்புலன்ஸ் தராததால் மகளின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற தந்தை..

மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததால், கர்நாடகாவை சேர்ந்த கூலித்தொழிலாளி மரணம் அடைந்த தன்னுடைய மகளின் உடலை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கர்நாடகாவில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருபர் திம்மப்பா. இவருடைய 20 வயது மகள், சமீபத்தில் மூச்சு திணறல் காரணமாக, கோடிஹள்ளி எனும் பகுதியில் இருந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்று அவர் மரணமடைந்தார்.
 
இதையடுத்து, தன்னுடைய மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல திம்மப்பா, ஆம்புலன்ஸ் வசதியை நாடியுள்ளார். ஆனால், அவருக்கு ஆம்புலன்ஸ் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. 
 
எனவே, வேறு வழியின்றி திம்மப்பா, மகளின் சடலத்தை, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.