1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (13:17 IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல பாடகர் கைது!

Abhishek
அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்து வரும் போஜ்புரி பாடகர் அபிஷேக்(21). இவர் சிறுமியை வன்கொடுமை செய்து இன்ஸ்டாவில் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் குருகிரராம் நகரில் வசித்து வருபவர் போஜ்புரி பாடகர்(21 வயது). இவர்,  பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது சமூக வலைதள பக்கங்களில் அதிக நபர்ககள் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அபிஷேக் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமிகள் அந்தரங்க புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் உடனே போலீஸில் புகார் தெரிவித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பாடகர் அபிஷேக்கை கைது செய்தனர்.

அதன்பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமிகளுடன் பழகியபோது, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, புகைப்படங்களை தன் செல்போனில் படம்பித்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாடகர் அபிஷேக்கை போலீஸார் சிறையில் அடைத்தனர்.