1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (07:54 IST)

கருத்துக்கணிப்புகள் பலிக்குமா? கர்நாடக தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

கர்நாடக மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இன்னும் ஒருசில மணி நேரத்தில் அரியணையில் அமரப்போவது யார் என்று தெரிந்துவிடும்
 
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பூகள் பொதுமக்களை குழப்பியுள்ளன. பாஜக, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று ஒருசில கருத்துக்கணிப்புகளும், தொங்கு சட்டசபை அமையும் என ஒருசில கருத்துக்கணிப்புகளும் கூறு வருகின்றன.
 
 சீ - ஓட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு: பாஜக 97 - 109, காங்கிரஸ் 87 - 99, மதசார்பற்ற ஜனதாதளம் 21 - 30, மற்றவை 1 - 8.
 
வி.எம்.ஆர். நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு: பாஜக 80 - 93, காங்கிரஸ் 90 - 103, மதசார்பற்ற ஜனதாதளம் 31 - 39, மற்றவை 2 - 4.
 
ஜன்கீ பாத் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவு: பாஜக 95 - 114, காங்கிரஸ் 73 - 82, மதசார்பற்ற ஜனதாதளம் 32 - 43, மற்றவை 2 - 3.
 
சிஎன்எக்ஸ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு. பாஜக 102 - 110, காங்கிரஸ் 72 - 78, ஜேடிஎஸ் 35 - 39, மற்றவை 3 - 5.
 
ரிப்பளிக் டிவி  தேர்தலுக்கு பிந்தைய   கருத்துக்கணிப்பு  முடிவு: பாஜகவு 95 முதல் 114,  காங்கிரஸ்: 73-82  தொகுதிகள் 
 
மேற்கண்ட கருத்துக்கணிப்பில் எந்த கருத்துக்கணிப்பு சரியானது என்பதை சற்று நேரத்தில் தெரிந்து கொள்வோம்