1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (11:52 IST)

ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் வருமான அமலாக்கத்துறை ரெய்டு

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டையும் அவர் கடுமையாக விமர்சித்து பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்.
 
இந்த நிலையில் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ தொடர்ந்த ஒரு வழக்கில் அவர் ஆஜராகாததால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் ப. சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை, கொல்கட்டா உள்பட  6 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும், சென்னையில் கைலாசம், ராம்ஜி நடராஜன், சுஜய் சுப்ரமூர்த்தி வீடுகளிலும், கொல்கட்டாவில் மனோஜ் மோகன்கா வீட்டிலும் சோதனை நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.