ஜப்பான், ஆப்கானிஸ்தானை அடுத்து இந்தியாவில் நில அதிர்வு: ரிக்டரில் 3.9 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது என்றும், பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் ஜப்பான், ஆப்கானிஸ்தானை அடுத்து இன்று ஜம்மு காஷ்மீரில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே புவியியல் ஆய்வாளர்கள் ஜப்பான், ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின் கீழ் உள்ள புவி தட்டுகள் ஒரே அடுக்கில் இருப்பதாகவும் ஒரு இடத்தில் நில அதிர்வு வந்தால் அடுத்தடுத்து மற்ற இடங்களிலும் வரும் என்றும் கூறியிருந்தனர். அது போலவே ஜப்பான் ஆப்கானிஸ்தானை அடுத்து இந்தியாவிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva