அந்தமான் நிகோபார் தீவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா?
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர் என்பதும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இந்தியா உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புவியியல் ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அந்தமான் நிக்கோபார் பகுதியில் வாழும் போது மக்கள் ஒருவித அச்சத்துடனே வீட்டை விட்டு வெளியே நின்று கொண்டிருப்பதாகவும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva