ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (16:03 IST)

மதுபோதையில் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்போலி காட் எனும் வனப்பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா தளத்தில், இரண்டு வாலிபர்கள் பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கோலாப்பூரை சேர்ந்த 7 நண்பர்கள் சமீபத்தில் அம்போலி காட் எனும் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த மலைப்பகுதி 2 ஆயிரம் அடி உயரமுள்ளது. அதில், இம்ரான் காடி மற்றும் பிரதாப் ஆகிய இரண்டு பேர் மது அருந்திய நிலையில், அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. ஒரு புறம் நீர் நிறைந்த குளமும், மறுபுறமும் 2 ஆயிரம் அடி பள்ளமும் இருந்தது.
 
மது போதையில் இருந்த அவர்கள், தடுப்பின் மீது ஏறி, பள்ளத்தாக்கு பகுதியில் நின்றனர். இதனை அவரின் நண்பர்களில் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் மதுபோதையில் தடுமாறி அங்கிருந்து கீழே விழுந்து விட்டனர். அதைக் கண்ட அவர்களின் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இருவரும் இறந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.