1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (22:57 IST)

இனி தென்னிந்தியா USSI என்று அழைக்கப்படுமாம்! துண்டாகிறதா இந்தியா?

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சி தடை சட்டம் ஒரு வகை தென்னிந்தியர்களை ஒன்று சேர்த்துவிட்டது என்றே கூற வேண்டும். தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் பல்வேறு பிரச்சனைகளில் கருத்துவேறுபாடுடன் இருந்த நிலையில் மாட்டிறைச்சி விவகாரம் தென்னிந்திய மாநிலங்களை ஒன்றிணைத்துவிட்டது.



 


அதற்கு சான்றாக 'திராவிட நாடு' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் பலமணி நேரமாக இந்திய அளவில் டிரெண்ட் ஆகி மத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.

மேலும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் விதமாக திமுக  எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இதுகுறித்து கூறியபோது, 'திராவிடநாடு என்ற வார்த்தை டுவிட்டரில் டிரெண்டிங் ஆவதை பாஜக சாதாரண விசயமாகக் கருதக்கூடாது. இது வெறும் தொடக்கம்தான். மதவாத கருத்துகளையும், இந்துத்துவா சிந்தனைகளையும் அமல்படுத்துவதை பாஜக இனி கைவிட வேண்டும். அதற்கான எச்சரிக்கையே திராவிட நாடு டிரெண்டிங்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது போதாதென்று கடந்த சில நிமிடங்களாக தென்னிந்தியாவை ஒன்றிணைத்து இனிமேல் USSI என்று அழைப்போம் என்றும் இதற்கு  ’யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா’  என்று பொருள் என்றும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. மாட்டிறைச்சி தடை சட்டத்தை திரும்ப பெற்று இந்தியா துண்டாகாமல் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று நடுநிலையாளர்கள் கூறி வருகின்றனர்.