இரட்டை இலை சின்னம்..! டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அதில், அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி பெயரை பயன்படுத்துவது தொடர்பாக அளித்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் நாளை மாலை 3 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.