இந்தியா இஸ்லாமியர்களுக்கான நாடல்லவா? ஆர்எஸ்எஸ் தலைவர் பேட்டி!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (08:41 IST)
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அச்சத்தை சிலர் உருவாக்க நினைக்கின்றனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். 

 
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தனது சமீபத்திய பேட்டியில், இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் தங்களை இந்துக்கள் என கூறிக்கொள்ள தகுதியற்றவர்கள். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அச்சத்தை சிலர் உருவாக்க நினைக்கின்றனர். 
 
இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கான பணியை அரசியல் கட்சிகளிடம் ஒப்படைத்து விடக்கூடாது. இரு மதங்களுக்கு இடையேயான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். மேலும்,  பசுக்காவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவது இந்துத்துவாவுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :