1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (11:49 IST)

டீ தராத கோபத்தில் அறுவை சிகிச்சையை பாதியில் விட்டு சென்ற மருத்துவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

டீ தராத கோபத்தில் அறுவை சிகிச்சையை பாதியில் விட்டுச் சென்ற மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
 மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக  மயக்க மருந்து கொடுத்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 
இந்த நிலையில் நான்கு பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், மருத்துவமனை ஊழியரிடம் டீ கேட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் டீ கிடைக்காததால் கோபம் அடைந்த மருத்துவர் அறுவை சிகிச்சை பாதியிலே விட்டுவிட்டு வெளியே சென்று விட்டார். 
 
நான்கு பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில் மருத்துவர் திடீரென டீ கிடைக்காத கோபத்தில் வெளியேறியது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 
 
இதனை அடுத்து மாற்று மருத்துவர் வரவழைக்கப்பட்டு உடனடியாக மீதமுள்ள நான்கு பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran