வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (09:45 IST)

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மருத்துவர் கைது!

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மருத்துவர் கைது!

தெற்கு டெல்லியின், லாஜ்பத் நகர் கிளினிக்கில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்கு வந்த இளம்பெண் ஒருவரை மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
 
மத்திய டெல்லியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் தொண்டையில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக சுஷில் மஞ்சல் மற்றும் அவரது மனைவி நடத்தி வந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
சம்பவத்தன்று வேறு பணி காரணமாக சுஷிலின் மனைவி வெளியே சென்றிருந்ததாகவும், இதனையடுத்து சுஷில் அந்த பெண்ணை வரவழைத்து தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் சுஷிலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் புகாரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கிளினிக்கிற்கு சென்றதாகவும் அங்குள்ள பெண் மருத்துவர் இன்னு சற்று நேரத்தில் கிளம்பிவிடுவார் என கூறி மருத்துவர் சுஷில் தன்னை உள்ளே வர சொல்லி அவரிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும், இது குறித்து வெளியே கூறக் கூடாது என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
 
மருத்துவர் சுஷில் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் அவர் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.