செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (18:03 IST)

உலகளவில் இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன தெரியுமா..?

india passport
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்திய நாட்டின் பாஸ்போர்டின் மதிப்பு  பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்ல பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை தேவைப்படுகிறது.

ஆனால், ஒரு சில நாடுகள் தங்கள் நாட்டின் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடும்.

அதன்படி, சமீபத்தில் இந்தியா,சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்காள் இனி விசா  இன்றி மலேசியாவுக்குள் நுழையலாம் எனவும் விசா இன்றி 30 நாட்கள் தங்கலாம்  தெரிவித்தது.

அதேபோல் இந்திய பிரபலங்களுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி கவுரத்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய நாட்டின் பாஸ்போர்டின் மதிப்பு  பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஸ்வீடன், தென்கொரியா, ஃபின்லாந்து ஆகிய  நாடுகள் 2 வது இடத்தில் உள்ளன. இந்திய பாஸ்போர்ட் இதில் 80வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இருந்து, இலங்கை, கத்தார், மலேசியா, மொரீசியஸ்,  தாய்லாந்து, கம்போடியா ஆகிய  62 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது