திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி கோவிலில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என திரிப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரொனா 3 வது அலை தீவிரமாகப் பரவி வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. இ ந் நிலையில், திருப்பதி கோயிலில் நாளை முதல் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும், நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்ச்சி அடைந்துள்ளனர்.