வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (17:18 IST)

140 கோடி மக்களுக்கும் ஏற்பட்ட அவமரியாதை- கர்நாடகம் முதல்வர் சித்தராமையா

sitharamaiya
ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் செளத்ரி ஆகியோர் பங்கேற்காததை ஆதரிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு   நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி  கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட விவிஐபிகள் கலந்துள்ள கொள்ளவுள்ளனர். இந்த கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்தனர்.

இந்த  நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கி, ஆதிர் செளத்ரி ஆகியோர் பங்கேற்காததை ஆதரிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘’சாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடக்கவேண்டிய ஒரு நிகழ்வு பிரதமர் மோடியின் கட்சி நிகழ்வாக மாறியுள்ளது. இது ராமர் மற்றும் 140 கோடி மக்களுக்கும் ஏற்பட்ட அவமரியாதை. பக்தியுடன் நடத்த வேண்டிய மதச்சடங்கை, அரசியல் பிரசாரமாக மாற்றி, இந்து மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர் ‘’என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  ''நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பாஜக மற்றும் சங்பரிவாரின் தவறான இந்துத்துவத்தை  தொடர்ந்து எதிர்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.