புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 22 ஜூலை 2017 (19:18 IST)

சசிகலாவிற்கு கூடுதல் தண்டனை வழங்கப்படும்: டிஐஜி ரூபா அதிரடி!!

சிறை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக சசிகலாவிற்கு, கூடுதல் தண்டனை கிடைக்கும் என்று டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறையின் விதிகளை மீறியதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
 
இதற்கு தொடர்பான பல வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகள் மீறியது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கூடுதல் தண்டனை வழங்கப்படும் என்று டிஐஜி ரூபா கூறியுள்ளார்.