1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:19 IST)

பிரவசத்தின் போது ‘பிரபல நடிகை’ உயிரிழப்பு : ’ஆம்புலன்ஸ் வராததால்’ விபரீதம் ! ரசிகர்கள் கண்ணீர்..

பிரபல மராத்தி நடிகை பூஜா ஸுஞ்சார் , பிரசவ வலிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் உள்ள ஹிங்கோலியைச் சேர்ந்தவர்  பிரபல நடிகை பூஜா ஸுஞ்சாஅர்(25) , மராத்தி மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவருக்கு தனி ரசிகர் வட்டாரமே உள்ளது.இவர் கர்ப்பாக இருந்த நிலையில், தன் சொரில் வசித்து வந்தார். 
 
இந்நிலையில், அவருகு நேற்று அதிகாலையில் வயிற்றில் பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
அப்போது, அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அது சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டது.
 
பூஜாவின் உடல் நிலையும் மோசமாகவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  ஹுங்கேலி ஹெல்த் செண்டருக்கு அழைத்துச் செல்லுபடி அறிவுறுத்தினர்.
 
அந்த சமயத்துக்கு வேறு ஒரு  ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. பிறகு நீண்ட நேரத்துக்கு பிறகு பூஜாவை அங்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பூஜாவின் குடும்பத்தினருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.