செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (15:11 IST)

’பலி கேட்ட சிவன்?’ 6 வயது சிறுவன் கொலை! – டெல்லியில் அதிர்ச்சி!

டெல்லியில் கஞ்சா போதையில் சிறுவனை கொலை செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டதால் தனது மகனையே பலி கொடுக்க துணிந்தார் சிறுத்தொண்டர் என்பது அறுபத்து மூவரில் ஒரு கதையாகும். ஆனால் சிவனின் பிரசாதம் என சொல்லி கஞ்சா, போதை வஸ்துகளை எடுத்துக் கொள்ளும் இளைஞர் கூட்டம் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.

டெல்லியில் உள்ள லோதி காலணி பகுதியை சேர்ந்த விஜய்குமார் மற்றும் அமர்குமார் என்ற இளைஞர்கள் இருவர் சிவனின் பிரசாதம் என சொல்லி கஞ்சாவை எடுத்துக் கொண்டுள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனை பிடித்து கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.


இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் அவர்களை கைது செய்து விசாரித்துள்ளனர். அப்போது சிவன் பிரசாதம் எடுத்துக் கொண்ட பின் சிவன் மனித பலி கேட்டதாகவும், அதனால் சிறுவனை கொன்று படைத்ததாகவும் அவர்கள் சொன்னதை கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.