வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (11:53 IST)

ஆட்டோ ஓட்டுனர் வீட்டிற்கு சாப்பிட சென்ற முதல்வர்: போலீஸார் தடுத்ததால் பரபரப்பு!

kejriwal
ஆட்டோ ஓட்டுனர் வீட்டிற்கு சாப்பிட சென்ற முதல்வர்: போலீஸார் தடுத்ததால் பரபரப்பு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு சாப்பிட சென்றபோது போலீசார் திடீரென அவரை மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்தார், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு சென்ற போது ஆட்டோ ஓட்டுநர்கள் கூடிய கூட்டம் என்று அவர் பேசினார். அப்போது விக்ரம் என்ற ஆட்டோ ஓட்டுனர் தனது வீட்டுக்கு சாப்பிட வரும்படி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் கோரிக்கை விடுத்தார்
 
உடனே அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கெஜ்ரிவால் அவருடைய ஆட்டோவிலேயே சென்றார்., இந்த நிலையில் திடீரென ஆட்டோவில் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுகொண்டிருந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் முதல்வருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது 
 
இதனை அடுத்து ஆட்டோவின் பின்னால் காவல் அதிகாரி ஒருவர் அமைத்துக் கொண்டதை அடுத்து அந்த ஆட்டோ போலீஸ் பாதுகாப்புடன் ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு சென்றது. ஆட்டோ டிரைவர் வீட்டில் முதல்வர் சாப்பிட்டவுடன் அவர் அங்கிருந்து கிளம்பிபும் வரை போலீசார் அருகில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது