செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:44 IST)

டெல்லியில் முழு ஊரடங்கா? முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை!

டெல்லியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் எண்ணமில்லை என சமீபத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சனி ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்து முதல்வர், துணை நிலை ஆளுனருடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும், நேற்று மட்டும் 15 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் டெல்லியில் ஏற்கனவே இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது