வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (16:20 IST)

செல்ல நாய் செய்த ’சேட்டையால் ’ உரிமையாளர் எடுத்த முடிவு !

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரு விலையுயர்ந்த நாயை, அதன் உரிமையாளர் ஒருவர் தெருவில் விட்டுள்ளார். இதனால் மற்ற நாயைப் போன்று அல்லாமல் இந்த நாய் ஸ்டைலாக இருந்ததால் இதுகுறித்து தகவல் அறிந்த விலங்கு ஆர்வலர் ஷமீன் அப்பகுதிக்கு சென்றார்.
அந்த நாயை தொட்டுப் பார்த்த போது அதன் காலரில் ஒரு குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. அதில் , இந்த நாய் நல்ல இனத்தை சேர்ந்தது. இதற்கு உணவும் அதிகம் தேவையில்லை. முக்கியமாக இதற்கு எந்த நோயும் இல்லை. சரியாக 5 நாட்களூக்கு ஒருமுறை குளிக்கும். ஆனால் யாரைக் கண்டாலும் குறைக்கும் .
 
மேலும், இந்த நாய் அருகில் இருந்த நாய் ஒன்றுடன் சட்ட விரோதமாக உறவு வைத்திருந்த காரணத்தால் இதை வீட்டை விட்டி வெளியேற்றினோம் என்று அதில் எழுதியிருந்தது.