புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (15:41 IST)

இன்னும் 3 வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு ?மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்

சீனாவில் இருந்து இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இதைத் தடுக்க  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், உலக அளவில் கொரொனாவால் 1614369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார், 96788 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 35,198 பேருக்கு கொரோனா தொற்று, 2,381 பேர்  உயிரிழப்பு என தகவல் வெளியாகிறர்து, 

இந்தியாவில் மட்டும் 6771 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.228 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பல மாநில முதல்வர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்ற ஊரடங்கு நீட்டிப்பது குறித்துப் பேசிவருவதாக செய்திகள் வெளியாகிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதாத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், கொரோனாவை தடுக்க மேலும் 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களில் இருந்து தகவல் வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஊரடங்கை 100% முழுமையாக பின்பற்றப்படுவதை மாநில சுகாதார அமைச்சர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் இதை மீறும்பட்சத்தில் நாம் கொரோனாவிற்கு  எதிராக நாம் பெருதும் பாதிக்கப்பட வேண்டியதிருக்கும் என எச்சரித்துள்ளார்.

எனவே மேலும் , மூன்று வார காலம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.