திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (18:09 IST)

கோவிஷீல்ட் தடுப்பூசி விலை குறைப்பு - சீரம் நிறுவனம் அறிவிப்பு

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைத் தடுக்கும் வகையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து கோவீஷீல்டு நிறுவனம் அறிவித்துள்ளதாவது:

மாநில அரசுகளுக்கு கொரொனா தடுப்பூசி விலை ரூ.400 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.300 ஆக குறைக்கப்பட்டுள்ளது என சீரம் நிறுவனத்தின் அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கோவிஷீல்ட் தடுப்பூசி விலையைக் குறைக்க வேண்டுமென  சீரம் நிறுவனத்திடம் மாநில மற்றும் மத்திய அரசுகள் கோரிக்கை வைத்த நிலையில் இன்று இந்நிறுவனம் விலைகுறைத்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.