1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (10:57 IST)

ஒரே நாளில் 6,442 பேர் பாதிப்பு; 34 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,748 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 46,389 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 34 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,28,250 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒருநாளில் மட்ட்டும் 3,109,550 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,159,816,124 ஆக உயர்ந்துள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.