செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (09:02 IST)

கோவிட் முடிவது கண் முன் தெரிகிறது… WHO!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன என உலக சுகாதார தலைவர் பேட்டி.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டடோரின் மொத்த எண்ணிக்கை 61.53 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 615,399,678 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,523,007 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 594,463,759பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 14,412,912 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன என உலக சுகாதார தலைவர் தெரிவித்துள்ளார். 2020 மார்ச் மாதத்தை விட தற்போது கொரோனா மரணங்கள் குறைந்து வருவதாக கூறிய அவர், கொரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வருவது போல் உள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் முடிவிற்கு வருவதற்கான அறிகுறி உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.