1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (11:00 IST)

ஊழியர்களை துரத்தி அடிக்காமல், பவ்யமாய் வழியனுப்பும் Honda: அமலில் VRS !!!

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக வி.ஆர்.எஸ். திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 
 
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹோண்டா கார்ஸ் நிறுவனம், விருப்ப ஓய்வூதிய திட்டத்தை (VRS) செயல்படுத்தியுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவான அனுபவத்தில் உள்ள ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொண்டு வெளியேறிவிடுங்கள் என கூறியுள்ளது. 
 
கொரோனாவுக்கு முன்பு பொருளாதார மந்தநிலை மற்றும் விற்பனை சரிவு ஆகிய காரணங்களால் சரிவில் இருந்த ஆட்டோமொபைல் சந்தை கொரோனாவால் படுத்துவிட்டது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு பூஜ்ஜியம் தயாரிப்பு பூஜ்ஜியம் விற்பனையாக உள்ளது. 
 
எனவே நிறுவனத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தவும், செயல்திறனை கொண்டுவரவும் விருப்ப ஓய்வூதிய திட்டத்தை செல்யல்படுத்தி உள்ளதாக ஹோண்டா நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.