1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (16:46 IST)

கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத் துறை !!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய  சுகாதாரத் துறை அமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்நிலையில் நாட்டில் மொத்தம் 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 20.57% ஆக அதிகரித்துள்ள நிலையில்,  இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் நிலைக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் குழு சென்னை,அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் மத்திய அரசின் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என  உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மே  3 ஆம் தேதிவரை  ஊரடங்கு உள்ள நிலையில், தற்போதைய நிலவரத்தைப் பார்க்கையில் நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில். மே 3 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.