வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:57 IST)

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எப்போது தடுப்பூசி!

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி என அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் கட்ட தடுப்பூசி சமீபத்தில் போடப்பட்ட நிலையில் முதல் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமாம். 
 
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா தடுப்பூசியால் ஒரு மரணம் கூட நிகழவில்லை. 85% முன்களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.